செய்தியாளர். அ.ஆனந்தன்
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை தாண்டி மன்னார் வளைகுடா பகுதியில் வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்திய கடலோர காவல்படை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையை நோக்கிச் சென்ற நாட்டுப்படகை அவர்கள் மடக்கி சோதனையிட்டனர். அதில் 5 சாக்குகளில் போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனை கைப்பற்றிய அதிகாரிகள் அவர்களை மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்த பாம்பனை சேர்ந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
5 சாக்குகளில் 99 கிலோ எடை கொண்ட ஹாஷிஷ் என்ற போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு 108 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.