சென்னையில் பாதிக்கப்பட்ட 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா : மாநகராட்சி ஆணையர்

சென்னையில் பாதிக்கப்பட்ட 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா : மாநகராட்சி ஆணையர்
சென்னையில் பாதிக்கப்பட்ட 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா : மாநகராட்சி ஆணையர்
Published on

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 98% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் 1900 தள்ளுவண்டிகள் மற்றும் 1182 மினி டிரக்குகள் மூலம் மாநகராட்சி முழுவதும் காய்கறி விநியோகம் நடக்கிறது. இதுவரை 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4,65,400 டன் அளவுக்கு காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அத்துடன், “பாதுக்காப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. விலைவாசிகளை கட்டுப்படுத்தும் வண்ணமும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைவாசிகளை ஏற்றி வைத்து விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com