வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த மே 26ஆம் தேதிமுதல் கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மீனா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், பூங்காவில் மேலும் 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் சிங்கம் மட்டுமல்லாமல் குரங்கு போன்ற மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com