சென்னை: கொரோனாவிலிருந்து மீண்ட 84 வயது மூதாட்டி..!

சென்னை: கொரோனாவிலிருந்து மீண்ட 84 வயது மூதாட்டி..!
சென்னை: கொரோனாவிலிருந்து மீண்ட 84 வயது மூதாட்டி..!
Published on

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,761லிருந்து 7447 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 516லிருந்து 643 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தை பொருத்தவரை, 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண் , 25 வயது இளைஞர் ஆகியோர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com