ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் மூலம் ஒடிஸாவில் இருந்து தமிழகம் வந்த 80 டன் ஆக்சிஜன்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் மூலம் ஒடிஸாவில் இருந்து தமிழகம் வந்த 80 டன் ஆக்சிஜன்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் மூலம் ஒடிஸாவில் இருந்து தமிழகம் வந்த 80 டன் ஆக்சிஜன்
Published on

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் கீழ் மூன்றாவது ரயில் ஒடிஸா மாநிலம் கலிங்கா நகரில் இருந்து 80டன் ஆக்சிஜனுடன் சென்னை வந்தடைந்தது.

தமிழகத்தில் நிலவிவரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு சூழ்நிலையை தடுப்பதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கம் தாராப்பூரில் இருந்து 80 டன் ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு முதலாவது ரயில் சென்னை வந்தடைந்தது. அதிகாலை 3 மணியளவில் வந்த ரயிலை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு லாரிகள் மூலம் மாற்றி தேவைகள் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அதைப்போல இரண்டாவது ரயில் ஜார்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 40 டன் ஆக்சிஜனுடன் சென்னை வந்தடைந்தது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஓரளவு குறைந்து வரும் நிலையில் மேலும் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மூன்றாவது ரயில் ஒடிஸா மாநிலம் கலிங்காநகரில் இருந்து 80 டன் ஆக்சிஜனுடன் சென்னை வந்தடைந்தது.

திருவொற்றியூர் கான்கார் நிறுவனத்தில் இரண்டு கண்டெய்னர் பெட்டிகளில் வந்தடைந்த ஆக்சிஜன் ரயிலில் இருந்து லாரிகளுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் ஆக்சிஜன், லாரிகள் மூலம் மாற்றப்பட்டு மருத்துவமனைகளில் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இக்கட்டான காலகட்டத்தில் தற்போது பல்வேறு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரயில்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதல் ஆக்சிஜன் ரயில்கள் தமிழகம் வரவுள்ளன. முழுமையாக வந்தபின் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை தீரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com