‘ஜெ.அன்பழகனுக்கு வென்டிலேட்டர் மூலமே 80% ஆக்ஸிஜன்’ - மருத்துவமனை நிர்வாகம்

‘ஜெ.அன்பழகனுக்கு வென்டிலேட்டர் மூலமே 80% ஆக்ஸிஜன்’ - மருத்துவமனை நிர்வாகம்
‘ஜெ.அன்பழகனுக்கு வென்டிலேட்டர் மூலமே 80% ஆக்ஸிஜன்’ - மருத்துவமனை நிர்வாகம்
Published on

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் கருவி மூலம் செலுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் ஜெ.அன்பழகனுக்குக் கடுமையான மூச்சுக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் அவருக்குச் சுவாசக் கருவி மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் வென்டிலேட்டர் கருவி மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அன்பழகனுக்கு 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் மூலம் செலுத்தப்படுவதாகவும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com