ஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..!

ஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..!
ஊரடங்கு  உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..!
Published on

மகாராஷ்டிராவில் இருந்து நடைபயணமாக திருச்சி வந்த இளைஞர்கள் அரசு உதவியுடன் திருவாரூர் சென்றடைந்தனர்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு படிக்கச் சென்ற மாணவ, மாணவிகள் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.

பலர் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாநிலங்கள் கடந்து நடக்கத் தொடங்கினர். நாடு முழுவதும் சாலைகள்  வழியாக பல பேர் நடந்தே சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கினர். அப்படி, மகாராஷ்டிராவில் இருந்து நடைபயணமாக திருச்சி வந்த இளைஞர்கள் அரசு உதவியுடன் திருவாரூர் சென்றடைந்தனர்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். ஊரடங்கு 144 தடை உத்தரவின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் கடந்த 29ஆம் தேதி நடைபயணமாக தமிழகம் நோக்கி புறப்பட்ட 7 இளைஞர்கள் நேற்று மதியம் திருச்சி வந்தடைந்தனர்.

 தற்போது அந்த இளைஞர்கள் திருச்சியில் இருந்து அரசு உதவியுடன் திருவாரூர் சென்றடைந்தனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழு இளைஞர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. உரிய பரிசோதனைக்கு பிறகே அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது. 1000கிமீ தூரத்திற்கும் மேல் இந்த இளைஞர்கள் நடந்தே திருச்சி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com