கன்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம்... தீவிர விசாரணையில் களமிறங்கிய 7 மாநில காவல்துறையினர்!

கேரளாவிலிருந்து கட்டுக்கட்டாக கன்டெய்னரில் பணத்தை கொள்ளையடித்து கைதான வழக்கை 7 மாநில காவல்துறையினர்கள் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் - சேலம் சரக டிஜிபி
நாமக்கல் - சேலம் சரக டிஜிபிபுதிய தலைமுறை
Published on

கேரளாவிலிருந்து கட்டுக்கட்டாக கன்டெய்னரில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை நாமக்கல் குமாரப்பளையம் அருகே வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தற்போது 7 மாநிலங்களின் காவல்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த கன்டெய்னர் எங்கும் நிற்காமல் சென்றதால், காவல்துறையினர் துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது, கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதில் 7 கொள்ளையர்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டுக்கட்டான பணத்துடன் (ரூ 66 லட்சம் என சொல்லப்படுகிறது) இருந்துள்ளனர். போலீசாரை கண்டதும், அவர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மற்ற 6 பேரில் ஒருவர் தப்பியோடிய நிலையில், 5 பேர் கைதாகி உள்ளனர். ஐவரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நாமக்கல் - சேலம் சரக டிஜிபி
அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்து!

கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிடிபட்ட லாரி ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்டது; லாரிக்குள் இருந்த காரில் நம்பர் பிளேட் இல்லை.

கூடுதலாக, பிடிப்பட்ட கொள்ளையர்கள், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தி சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடமாநில கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் 7 மாநில காவல்துறையினர் இணைந்து செயல்ப்பட்டு வருகின்றனர்.

சேலம் சரக டிஐஜி உமா தற்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, “கொள்ளையர்கள் அனைவரும் திருச்சூரில் காரில் சென்றுதான் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் லாரியில் மாறி வந்துள்ளனர். அந்த லாரி வழக்கமாக செல்லும் லாரிதான். திருச்சூர் கொள்ளைக்குப்பின் மேற்கு மண்டலம் முழுக்க அலெர்ட் செய்யப்பட்டது.

அதன்பேரில்தான் இவர்களை சந்தேகத்தில் பிடிக்க முயன்றனர். அப்போது நடந்த தாக்குதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிடிபட்ட 7 பேரும், ஹரியானாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களை குறிவைத்து, கூகுள் மே உதவியோடு கொள்ளையடித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முழுவதுமாக அறிய, இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com