செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை கடித்துள்ளது. இதில் கை, கால்களில் படுகாயமடைந்த திரு.வி.க நகரை சேர்ந்த 5 வயது சிறுவன், சாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் (47), பூந்தோட்ட வீதியை சேர்ந்த சாந்தா (60), ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த கோகிலா மற்றும் அவரது மகன், மற்றும் மலங்கு தெருவைச் சேர்ந்த சுஹேல் (43), பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேர் படுகாயத்துடன் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.