'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு

'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு
'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

'தலப்பாகட்டி' என்ற பெயரையோ அதன் வணிகக் குறியீடையோ பயன்படுத்த 7 பிரியாணி கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் சார்பில் அதன் பங்குதாரர் நாகசாமி தாக்கல் செய்த மனுவில், கடந்த 1957ம் ஆண்டு தனது தாத்தா நாகசாமி நாயுடு, திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தை தொடங்கியதாகவும், எப்போதும் அவர் தலைப்பாகை கட்டியிருந்ததால், தலப்பாக்கட்டி நாயுடு கடை என அழைக்கப்பட்டதாகவும், அவரது மறைவுக்குப் பின், தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான தங்கள் நிறுவனத்தின் தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தலப்பாக்கட்டி பெயரை பயன்படுத்த கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி உள்ளிட்ட ஏழு உணவகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி பின்வரும் 7 உணவகங்களுக்கும் உத்தரவிட்டார்.

உணவகங்களின் பெயர் 

தலப்பாகட்டு பிரியாணி - கோடம்பாக்கம்
தலப்பாகட்டு பிரியாணி - கூடுவாஞ்சேரி 
ஸ்டார் தலப்பாகட்டு ரெஸ்டாரன்ட் - கீழ்ப்பாக்கம்
தாஜ் தலப்பாக்கட்டு பிரியாணி - பூந்தமல்லி
ஸ்டார் தலப்பாகட்டு பிரியாணி-  ஸ்ரீபெரும்புதூர்
சென்னை ஹலால் தலப்பாகட்டு பிரியாணி - குரோம்பேட்டை
முகமது அஷ்ரஃப் தலப்பாகட்டி பிரியாணி - குரோம்பேட்டை 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com