சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரிப்பு.. திமுக நிர்வாகியின் மகன் உட்பட 7 இளைஞர்கள் கைது!

வீட்டிலேயே மெத்தம்பெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்PT
Published on

வீட்டிலேயே மெத்தம்பெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், திமுக நிர்வாகி மகன் மூலம் வேதியியலில் கோல்ட் மெடல் வாங்கிய மாணவரின் நட்பு கிடைத்து, அதன் மூலம் போதைப்பொருள் தயாரிப்பில் இறங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் கெமிக்கல் வாங்கி வீட்டிலேயே ஆய்வக்கூடம் நடத்தி போதைப் பொருள் தயாரித்தது தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் தயாரித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என திட்டமிட்ட மாணவர்கள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டது எப்படி? விரிவாக பார்க்கலாம்..

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
வடலூர்: 16 கிலோ அரிசி வாங்கியவருக்கு கிடைத்த 15 லட்சம்.. கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

என்ன நடந்தது?

கல்லூரி மாணவர்கள், பொறியியல் பட்டதாரிகள் சிலர் இணைந்து மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணையிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

போதைப்பொருள்
போதைப்பொருள்

அந்த வகையில் நேற்று மாலை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் வைத்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு போலீசார் ஏழு பேரை கைது செய்தனர். அங்கு ஆய்வு மேற்கொண்டபோது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வீட்டிலேயே ஆய்வகம் நடத்தி மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது அதிர்ச்சியளித்தது. இவர்களிடமிருந்து 250 கிராம் மெத்தப்பெட்டமைன் எனும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
விற்றுத்தள்ளும் FIIs... விடாமல் வாங்கும் DIIs... என்று முடியும் இந்த போட்டி?

மூளையாக செயல்பட்ட கோல்ட் மெடல் பட்டதாரி..

பின்னர் கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்,

  1. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த BE ரோபோடிக் இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் பிரணவ் (21),

  2. மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிஷோர் ( 21),

  3. கோலப்பஞ்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான நவீன் (21),

  4. மணலி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி தனுஷ் (23),

  5. மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பட்டப்படிப்பு படித்துவரும் ஞான பாண்டியன் (22),

  6. தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிளமிங் பிரான்சிஸ் (21),

  7. கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார்

ஆகிய 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட ஞான பாண்டியன்
போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட ஞான பாண்டியன்

இவர்களில் கைது செய்யப்பட்ட ஞான பாண்டியன் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வேதியியல் பட்ட படிப்பு படித்து வருவதும், வேதியியல் பாடத்தில் கோல்ட் மெடல் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
“கடவுள் சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்” - மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திமுக நிர்வாகியின் மகன்..

போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட கிஷோர்
போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட கிஷோர்

கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் என்பவரின் தந்தை கதிரவன், திமுக-வின் மீஞ்சூர் ஒன்றியம் 22வது வார்டு கவுன்சிலர் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
“இதுதான் இந்திய ஆர்மியின் முகம்..” தரமாக வெளிவந்த சிவகார்த்திகேயனின் ’அமரன்’ பட ட்ரெய்லர்!

போதைப்பொருள் தயாரிக்க திட்டம்..

போலீசார் தொடர் விசாரணையில், பிரவீன், கிஷோர், நவீன், தனுஷ் ஆகியோர் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் 3 லட்ச ரூபாய்க்கு ரெட்ஹில்ஸ் பகுதியில் அருண் என்பவர் மூலம் 250 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வாங்கியுள்ளனர்.

பின்பு அதனை ஒரு கிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கு பிளமிங் பிரான்சிஸ் மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்கள். மேலும், மெத்தம்பெட்டமனை பயன்படுத்திய பிளமிங் பிரான்சிஸ் மற்றும் ஆகாஷ் வாங்கிய போதைப்பொருள் போலியானது என்று தெரியவந்தது.

மெத்தம்பெட்டமன்
மெத்தம்பெட்டமன்

அதனால் பிரவீன், கிஷோர், நவீன், தனுஷ் ஆகியோர்கள் சேர்ந்து தாமே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரித்து அதிக விலைக்கு விற்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் திமுக நிர்வாகி மகன் கிஷோர், தனது நண்பரான ஞான பாண்டியன் வேதியியல் துறையில் கோல்டு மெடல் வாங்கியதாகவும், மேலும் வேதியியலில் பல ஆய்வுகள் செய்து கல்லூரி அளவுகளில் நடக்கும் போட்டிகளில் பல பரிசுகள் வாங்கியதாகவும் கூறி தனது கல்லூரி நண்பர்களுடன் தனது நண்பரான ஞான பாண்டியனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
”100 முறைக்கு மேல் பார்த்தாலும் தாக்கம் குறையவில்லை..”! கங்குவா படத்தை பாராட்டிய மதன் கார்க்கி!

சிக்கியது எப்படி?

இதனையடுத்து, முதுகலை வேதியியல் படித்துவரும் ஞான பாண்டியன் என்பவரிடம், படிப்பில் கிடைத்த ஆய்வக அறிவின் மூலம் மெத்தப்பட்டமைன் தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பின்னர், 5 நபர்களும் சேர்ந்து செளகார்பேட்டையில் உள்ள கெமிக்கல் கடையில் போதைப்பொருள் தயாரிக்க தேவையான கெமிக்கல் பொருட்களை வாங்கி வந்துள்ளனர். அதன் பின்னர் பிரவீன் வீட்டில் ஆய்வகம் நடத்தி மெத்தம்பெட்டமைன் தயாரிக்கும் முறையை சோதனை செய்து பார்த்துள்ளார்கள்.

போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட நவீன்
போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட நவீன்

இதையடுத்து பிரவீன் என்பவரின் வீட்டினை சோதனை செய்து போதைப்பொருள் தயாரிக்க வாங்கிய கெமிக்கல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரவீனின் தாய் சிறுவயதில் இறந்ததால் அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் பிரவீன் தனியாக தனி வீட்டில் வசித்து வருவதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் அந்த வீட்டை ஆய்வகமாக பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட பிளமிங்
போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட பிளமிங்

மேலும், இவர்கள் பயன்படுத்திய இரண்டு லேப்டாப்புகள் 7 செல்போன்கள் சிறிய அளவிலான எடை மெஷின்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்.. வீரேந்திர சேவாக் சாதனையை முறியடித்த டிம் சவுத்தீ!

7 பேர் கைது..

விசாரணையில் பலமுறை மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை ஆய்வகத்தில் தயாரித்து அது தோல்வியில் முடிந்ததாகவும், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருளானது பாதி அளவு சரியாக வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, போலி மெத்தம்பெட்டமைனை விற்பனை செய்த அருண்குமார், ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள்
போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள்

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போதைப்பொருள் தயாரித்து பிடிபட்டவர்கள்
344 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே! 15 சிக்சர்கள் விளாசிய சிக்கந்தர் ராசா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com