ஆந்திரா மாநிலம் கடப்பா அருகே தமிழகத்தை சேர்ந்த 7 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் 7 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின்படி அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக அங்கே சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே 7 தொழிலார்கள் மீட்கப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள ஆந்திர போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.