சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுப்பணிகள் இன்று நிறைவடைந்த நிலையில் 7,150 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதில் இந்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டமாக நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 7 ஆயிரத்து 150 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சுடுமண் முத்திரைக் கட்டைகள், தந்தத்தினால் ஆன காதணிகள், தாயக்கட்டைகள், பாசிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட அகழ்வாய்வின்போது ஆயிரத்து 800 பொருட்களும், இரண்டாம் கட்ட ஆய்வில் 3 ஆயிரத்து 550 பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மே மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் ஆயிரத்து 800 பொருட்கள் கிடைத்துள்ளன. மூன்று கட்ட ஆய்விலும் மொத்தம் 7,150 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.