வெளி மாநிலங்களில் வசித்த தமிழர்கள் 66 ஆயிரம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் - தமிழக அரசு

வெளி மாநிலங்களில் வசித்த தமிழர்கள் 66 ஆயிரம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் - தமிழக அரசு
வெளி மாநிலங்களில் வசித்த தமிழர்கள் 66 ஆயிரம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் - தமிழக அரசு
Published on

வெளி மாநிலங்களில் வசித்த தமிழர்கள் 66 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மூன்றாம்கட்ட ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளன. பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த ரயில்கள் மூலம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். சொந்த வாகனங்கள் மூலமாகவும் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில்  வெளி மாநிலங்களில் வசித்த தமிழர்கள் 66 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு 19 ஆயிரத்து 57 பேர் திரும்பி உள்ளனர்.தி ண்டுக்கல்லுக்கு 16793 பேர் திரும்பி உள்ளனர். மதுரைக்கு 3126 பேர் வந்துள்ளனர்.

தூத்துக்குடிக்கு 3 ஆயிரத்து 607 பேர் வந்துள்ளனர் என அரசு குறிப்பிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியவர்கள் என்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com