60 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில்: தள்ளாடும் வயதிலும் தளராத பணி

60 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில்: தள்ளாடும் வயதிலும் தளராத பணி
60 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில்: தள்ளாடும் வயதிலும் தளராத பணி
Published on

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், ஒரு வயதான தம்பதி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தள்ளாடும் வயதிலும் தளராமல் செய்யும் அவர்களது பணி வியப்பை ஏற்படுத்துகிறது.

செம்மண், களிமண் ஆகியவற்றை பக்குவமாக கலந்து நேர்த்தியாக அகல்விளக்கை வடிவமைக்கும் முதியவர் ராமசாமி , மண்பாண்டத் தொழிலை 60 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார். தனது மனைவியின் துணையுடன் செய்துவரும் இந்த தொழிலில், பானைகள் உள்ளிட்டவற்றை மனம் கவரும் வகையில் வடிவமைப்பது இவரது சிறப்பு. தற்போது டிசம்பர் 2 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். சுற்றுவட்டாரப் பகுதியில் இவரைத் தவிர வேறு யாரும் அகல்விளக்கை தயாரிப்பதில்லை. இது ராமசாமிக்கு பெருமை தரக்கூடியது என்றாலும், இவருக்கு பின்னால் இந்த தொழிலை செய்ய யாரும் இல்லை என்ற கவலை இவருக்கு உள்ளது.

நவீனமயமாக்கலை நோக்கிய பயணத்தை தவிர்க்க முடியாது என்றாலும், பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற மண்பாண்ட பொருட்களுக்கு, திருவிழாக்காலங்களிலாவது மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com