மதுராந்தகம் அருகே இரும்பேடு கிராமத்தில் 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய மூன்று சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அளித்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் முனைவர் ரமேஷ், பிரசன்னா மற்றும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோரால் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு கல்வெட்டுடன் கூடிய விநாயகர் சிற்பம், துர்க்கை அம்மன் ஆகியவை கண்டறியப்பட்டது.
இதுபோல் இந்த கிராமத்தில் பல்வேறு சிலைகள் கல்வெட்டுகள் இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி அதற்கான வரலாற்று பெயர் பலகை வைத்து இந்த கிராம மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.