சென்னையிலுள்ள ஓட்டல்களில் கடந்த ஆறு மாதங்களாக 55 சதவிகித அறைகள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொழில் வளர்ச்சி தேக்க நிலையை அடைந்துள்ளது. அத்துடன் தொழில் சார்ந்த ஒப்பந்தங்களும் பெரும் அளவில் நடை பெறவில்லை. இந்தச் சூழலில் தொழில் சாரந்த விருந்தினர்களின் சென்னை வருகையும் குறைந்துள்ளது.
மேலும் சராசரியாக சென்னை நகரிலுள்ள நட்சத்திர ஓட்டல்களில் 65 சதவிகித அறைகள் நிரம்பும். எனினும் தற்போது இந்த ஓட்டல்களில் அறைகள் நிரம்பும் சதவிகிதம் 45-50%மாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையிலுள்ள ஓட்டல்களில் 55 சதவிகித அறைகள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொழில் சாரந்த விருந்தினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. பொதுவாக சென்னையிலுள்ள ஓட்டல்களில் பெரும்பாலும் மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த விருந்தினர்கள் வருவது வழக்கம். தற்போது தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையினால் இந்த விருந்தினர்களின் குறைந்துள்ளது.