ஆம்ஸ்ட்ராங் படுகொலை: A1 குற்றவாளி நாகேந்திரன்.. 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சொல்வதென்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் A1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனின் பெயரை சேர்த்து காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகையில் உள்ள விவரங்கள் என்னென்ன?
குற்றப்பத்திரிக்கை
குற்றப்பத்திரிக்கைமுகநூல்
Published on

A1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன்

சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி அரங்கேறியது அந்த பயங்கரம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தேசிய அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழ்நாட்டின் தலைநகரில் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் சென்னையின் மூளை முடுக்கெங்கிலும் இருந்த ரவுடிகளை சென்னை காவல்துறை உற்று நோக்கி, ஒவ்வொருவராகக் கைது செய்யத் தொடங்கியது. அவர்களுக்கு இந்த கொலையில் இருந்த தொடர்பையும் அம்பலப்படுத்தியது. அரசியல் கட்சிகளில் இருந்தவர்கள் உட்பட, தேடித் தேடிப் பிடித்து பெண் ரவுடிகள் உட்பட 28 பேரை கைது செய்தது காவல்துறை. அவர்களில் 25 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

அஸ்வத்தாமன் - நாகேந்திரன்
அஸ்வத்தாமன் - நாகேந்திரன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகையை செம்பியம் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அதில் 750 ஆவணங்களை இணைத்துள்ளனர். குற்றப் பத்திரிகையில் ஏ1 எனப்படும் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் பெயரும், 3ஆவது குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
‘அந்த மனசுதான் சார்...’ - ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி சொன்னது குறித்து நெகிழ்ந்து பேசிய விநாயகன்!

முழுவிபரங்களும் குற்றப்பத்திரிக்கையில்..

ஏற்கெனவே கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன், அங்கிருந்தவாறே ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்டதாகவும், தந்தையின் திட்டத்திற்கு அஸ்வத்தாமன் பொருள் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆற்காடு சுரேஷ்
ஆற்காடு சுரேஷ்

ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிதீர்க்க ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், தொழில் போட்டி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் காரணமாக சென்னையில் உள்ள பல ரவுடிகள் இணைந்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையை எப்படி அரங்கேற்றினார்கள்? கைது செய்யப்பட்டுள்ள 28 ரவுடிகள் கொலைக்காக என்னென்ன செய்தனர்? என்ற முழு விவரங்களையும் குற்றப்பத்திரிக்கையில் காவல்துறையினர் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
நடிகை பிரியங்கா மோகன் கலந்துகொண்ட நிகழ்வில் மேடை சரிந்து விபத்து.. நலமுடன் உள்ளதாக பிரியங்கா ட்வீட்!

"குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" - BSP

கைதானவர்களின் சொத்துக்கள், செல்போன்கள், ஆயுதங்களின் விவரங்கள் குறித்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டையே அதிரவைத்த அரசியல் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை காவல்துறையினர் என்கவுட்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

குற்றப்பத்திரிக்கை
“காவல்துறை மனதுவைத்தால் மட்டுமே மாணவ மாணவிகளை காக்க முடியும்” எடப்பாடி பழனிசாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com