நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்.. எந்தெந்த மண்டலங்களில் எத்தனை கடைகள் தெரியுமா?
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூட கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாகவும், அதனை செயல்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் 500 கடைகள் நாளை முதல் செயல்படாது என்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கின்றன. இக்கடைகளின் பணியாளர்களை வேறு இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை மண்டலத்தில் 138, கோவை மண்டலத்தில் 78, மதுரை மண்டலத்தில் 125, சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த முழு விவரத்தையும் இந்த வீடியோவில் பார்க்கவும்.