EXCLUSIVE: உயிருக்கு ஆபத்தான இடத்தில் 500 குடும்பங்கள்; JAINS WESTMINSTER களநிலவரம் என்ன?

ஏறத்தாழ 500 குடும்பங்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுவரின் பூச்சுக்களும் மேற்கூரைகளும் உதிர்ந்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது JAINS WESTMINSTER அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். கடந்த 2015 ஆம் ஆண்டு சாலிகிராமத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே பக்கவாட்டு சுவர்களின் பூச்சுகள் உதிர்ந்த வண்ணம் இருந்தது. முதலில் சிறிதளவே இருந்த இந்தப் பிரச்னை, நாளடைவில் அதிகமானது. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வீட்டின் மேற்கூரையின் பூச்சுக்கள் உதிர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் கட்டடம் உள்ளது. இது குறித்து புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது அங்கு வசிப்பவர்களிடமும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கருத்துகளை கேட்டது. அவர்கள் பகிர்ந்து கொண்டவை, மக்கள் பேசியவை அனைத்தையும் செய்தியில் இணைக்கப்பட்ட காணொளியில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com