நடுக்கடலில் ஏற்பட்ட சூறைகாற்றால் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுபடகு கடலில் முழ்கியதால் ஆபத்தான நிலையில் இருந்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
நேற்று காலை பாம்பன் வடக்கு கடற்பகுதியிலிருந்து அந்தோணி என்பவரின் நாட்டுபடகில் விஜி, அன்ட்ரன், அல்டக், ஜெகதை, பிரிட்டோ உள்ளிட்ட ஜந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பும் போது திடீரென சூறைக்காற்று வீசியுள்ளது. இதனையடுத்து இவர்களது படகு நடுக்கடலில் முழ்கியதால் படகிலிருந்த ஜந்து மீனவர்களும் உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர்.
அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் சம்பவத்தை அறிந்து ஆபத்தான நிலையிலிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர், பின் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது
பின் நடுக்கடலில் மூழ்கிய படகை சக மீனவர்கள் இரண்டு நாட்டுப்படகுகளில் சென்று ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின் சேதமடைந்த படகை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர் ஆனால் படகிலிருந்த மீன்பிடி சாதனங்கள் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்படதாகவும் கடலில் முழ்கிய படகு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர். ராமேஸ்வரம் மற்றும் பாம்பனில் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தால் புயல் மற்றும் சூறவளிக் காற்று போன்ற இயற்கை இடற்பாடுகளில் தங்களது படகுகளைப் பாதுகாக்க முடியும். ஆகவே அரசு எங்களின் பல ஆண்டு கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தள்ளனர்
இதே போல ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகு கடல் சீற்றத்தால் பலத்த சேதமடைந்து கரை ஒதுங்கியது. கடல் சிற்றத்தால் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கிய படகுகளை மீனவர்கள் சிரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.