புதுக்கோட்டையில் முறையான பராமரிப்பு இன்றி தேரோட்டம் நடைபெற்றதால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை திருக்கோகர்னேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றனர். மேடான பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அதிகப்படியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேடான பகுதியிலிருந்து தேர் வேகமாக கீழிறங்கியபோது, அதன் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக சக்கரத்தின் கீழ் தடுப்புக்கட்டையை வைத்ததாக தெரிகிறது.
பொதுவாக தேரின் வேகத்தை கட்டுப்படுத்த அதன் பின்னால் டிராக்டரை பயன்படுத்து வழக்கம். ஆனால், இங்கு தடுப்புக் கட்டையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. (1/3) pic.twitter.com/slPDFUrBS4
— K.Annamalai (@annamalai_k) July 31, 2022