கொத்தடிமைகளாக கொடுமைகள் : செங்கல் சூளையிலிருந்து 5 பேர் மீட்பு

கொத்தடிமைகளாக கொடுமைகள் : செங்கல் சூளையிலிருந்து 5 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக கொடுமைகள் : செங்கல் சூளையிலிருந்து 5 பேர் மீட்பு
Published on

ராணிப்பேட்டையில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 5 பேர் மீட்கப்பட்டுள்‌ளனர். 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் கடந்த ஒரு வருட காலமாக ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வருவதாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலையடுத்து சார் ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த மானாமதி, பெருமாள் சேரி என்ற பகுதிகளை சேர்ந்த சண்முகம், அஞ்சலி, ரமேஷ், செல்வி, தினேஷ் ஆகிய 5 பேரை, ரூபாய் ஒரு லட்சத்து கொடுத்து கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வேலை வாங்கி வருவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஐந்து பேரையும் மீட்ட சார் ஆட்சியர், செங்கல் சூளையில் உரிமையாளரான பார்த்திபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மீட்கப்பட்டவர்களுக்கு விடுப்பு சான்றிதழையும், உணவு உடைகளையும், உதவி தொகையையும் சார் ஆட்சியர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com