ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு?

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு?
ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு?
Published on

பெரம்பலூரில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்-சசிதேவி தம்பதியரின் 4 வயது மகன் ரெங்கநாதன். சசிதேவி தனது மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சிறுவன் ரங்கநாதன் ஜெல்லி மிட்டாய் வேண்டும் எனக் கேட்டு அடம் பிடிக்கவே அதே பகுதியில் உள்ள கடையில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் ஜெல்லி மிட்டாயை வாங்கி கொடுத்துள்ளார் சசிதேவி. 

இதையடுத்து ஜெல்லியை திண்று கொண்டிருக்கும் போதே சிறுவன் ரெங்கநாதன் மயக்கமடைந்து பரிதிபமாக உயிரிழந்தான். சிறுவனின் உடல் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெல்லி சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்தான் என உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இது தொடர்பாக பெரம்பலூர் நகர போலிஸார் சம்மந்தப்பட்ட கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜெல்லி மிட்டாய்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சௌமியாவிடம் கேட்ட போது ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவ்வாறு அடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். மருத்துவத்துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது பிரேத பரிசோதணைக்குப்பிறகே சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்று குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com