வேலூர் அருகே 4 மாணவிகள் தற்கொலை: சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு

வேலூர் அருகே 4 மாணவிகள் தற்கொலை: சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு
வேலூர் அருகே 4 மாணவிகள் தற்கொலை: சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு
Published on

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே 4 மாணவிகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவம் பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர். வகுப்பு ஆசிரியை ஒருவர் திட்டியதால் மனமுடைந்த மாணவிகளான தீபா, மணிஷா, சங்கரி, ரேவதி பள்ளிக்கு அருகில் உள்ள உள்ள கிணற்றில் குதித்து தங்களது உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 மாணவிகளின் மரணத்தை சந்தேக மரணமாக நெமிலி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உயிரிழந்த மாணவி சங்கரியின் தந்தை ரவி அளித்த புகாரில் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே,  மாணவிகள் தற்கொலைக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளை திட்டிய ஆசிரியையை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com