விமான சாகச நிகழ்ச்சி: 230 பேருக்கு மயக்கம்.. 93 பேர் மருத்துவமனையில் அனுமதி! 4 பேர் உயிரிழந்த சோகம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சிPT
Published on

இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

இந்த சாகச நிகழ்ச்சியில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட போர் விமானங்களும், அதுமட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலமாக பொதுமக்கள் முன்னிலையில் விமானப்படையின் திறனை வெளிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

#JUSTIN | விமான சாகசம் - சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு
#JUSTIN | விமான சாகசம் - சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு

அதன்படி அக்டோபர் 6-ம் தேதியான இன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலிருந்து கண்டுகளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1 மணிவரை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண கூட்ட நெரிசலிலும், வெயிலிலும் காத்திருந்து பார்த்த மக்களில் சுமார் 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றபோது ரயில் வர தாமதம்.. தண்டவாளத்திலேயே நடந்து சென்ற மக்கள்..!

230 பேர் மயக்கம்.. 4 பேர் உயிரிழப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் முதலில் 30-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சி

ஏற்கனவே மயக்கம் ஏற்பட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற இருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது தினேஷ்குமார் (37), சீனிவாசன் ஆகிய இருவர் உட்பட மொத்தமாக 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் விழாவை காண வரும் மக்களுக்காக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதுவே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமென்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com