கொரோனா: சென்னையில் 4 பேர் உயிரிழப்பு

கொரோனா: சென்னையில் 4 பேர் உயிரிழப்பு
கொரோனா: சென்னையில் 4 பேர் உயிரிழப்பு
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இந்தியாவை பொருத்தவரை 1,65,386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு 4,711 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 70, 920 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 19,372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 145 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,304 ஆக உள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது ஆண், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது ஆண் , பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 77 வயது முதியவர் என 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com