பெங்களூரு டூ சென்னை: வாகன சோதனையில் சிக்கிய 3 டன் புகையிலை பொருட்கள் - 4 வடமாநில இளைஞர்கள் கைது

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல். கடத்தலுக்கு உதவியாக இருந்த மூன்று சொகுசு கார்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Accused with police
Accused with policept desk
Published on

செய்தியாளர்: ச.சரத்குமார்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வழியாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு ‘தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள்’ கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார், வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

Cars seized
Cars seizedpt desk

அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அதிவேகமாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காரில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அடுத்தடுத்து மேலும் இரண்டு கார்கள் பிடிபட்டன. இதைத் தொடர்ந்து பிடிபட்ட காரை சோதனை செய்தனர். அப்போது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வதும், அதன் மொத்த எடை சுமார் 3 டன் எனவும், மதிப்பு 6 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்தது.

Accused with police
சென்னை: கத்தியைக் காட்டி வழிப்பறி... இருவர் கைது!

மேலும் கடத்தலுக்கு உதவியாக இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான மூன்று சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார், புகையிலை பொருட்களை காரில் கடந்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்குமார் (22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய நான்கு வட மாநில இளைஞர்களை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com