“3 பிள்ளையையும் தெருவுல விட்டுட்டு” சிவகாசி பட்டாசுஆலை விபத்தில் ஒரே குடும்பத்தில் பறிபோன 4உயிர்கள்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்pt web
Published on

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சரவணன் என்பவர் தனது பெயரில், செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். 20க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ஆலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் பட்டாசு மருந்து பொருட்களின் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானகின, 7 அறைகள் சேதமடைந்தன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதையடுத்து ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இதுகுறித்து கூறுகையில், “பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே சிவகாசியில், அரசின் பயிற்சி மையம் ஒன்றும் செயல்படுகிறது. பயிற்சி பெறாத தொழிலாளர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரவில்லை எனில் அவர்களுக்கு முதலில் அபராதத்தோடு பயிற்சி அளிப்போம். இரண்டாவது எச்சரிக்கைக்குப் பிறகும் பயிற்சிக்கு வரவில்லை எனில், அவர்களை வைத்து இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் மட்டும், ஏற்கனவே உரிமம் வழங்கி விதிமுறைகளை மீறிய 82 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com