கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த நால்வரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாக்குமரி மாவட்டம் வடசேரி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் நாகர்கோவிலில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பானை ரவி, டேனியல் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த கண்ணன், ஜெகன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாப் பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்தக் கும்பல் உசிலம்பட்டியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கன்னியாகுமரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. கோட் வார்த்தை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், கஞ்சா சம்பந்தமாக இதுவரை 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாகர்கோவில் சரக ஏ. எஸ். பி ஏ. எஸ். பி ஜவகர் தெரிவித்தார்.