கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரை மாவட்டத்தில் 3625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரை மாவட்டத்தில் 3625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரை மாவட்டத்தில் 3625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
Published on

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3,625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில் 199 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609ஆக உயர்ந்துள்ளது. உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3,625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், கொரோனா தொற்றுடைய நபரிடம் பழகியவர்கள் என மாநகரில் 1350 பேரும், புறநகரில் 2275 பேரும் என மொத்தம் 3625 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com