கடலூரில் புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்த 3ஆயிரம் பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த 8 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே, கடலூரில் புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்த 3ஆயிரம் பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர், டெல்டா மாவட்டங்கள் புயலை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெரு மழையை சமாளிக்கவும், மீட்புப்பணிகளை தொய்வின்றி செய்யவும் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன.