முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் விடுப்பு கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் கொண்ட அமர்வு பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.
மேலும் இந்த உத்தரவுப் பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.