இலங்கை தமிழர்கள் 3 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் - மரைன் போலீசார் விசாரணை

இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழர்கள்
இலங்கை தமிழர்கள்pt desk
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட மூன்று பேர், நேற்று அதிகாலை பைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்து இறங்கினர். இதையறிந்த தனுஷ்கோடி மீனவர்கள், மண்டபம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த மரைன் போலீசார், மூவரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இலங்கை தமிழர்கள்
இலங்கை தமிழர்கள்pt desk

விசாரனையில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் தமிழர்கள் பகுதியில் வேலை இல்லாமல் அத்தியாவசிய பொருள்களின் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அப்படி கூடுதல் விலை கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காத அவல நிலை உள்ளது.

இலங்கை தமிழர்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈராக், ஜோர்டான் மக்கள்.. எல்லையை கடக்க முயற்சி!

உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் அங்கு வாழ முடியாத ஒரு அபாயகரமான சூழல் நிலவுவதால் நாங்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டோம்” என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மூன்று பேரும் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com