கடலூர்: மருத்துவமனையில் மாவுக்கட்டுடன் ரவுடி பார்த்த வேலை - 3 போலீசார் சஸ்பெண்ட்

கடலூரில் நீதிமன்ற காவலில் இருக்கும் ரவுடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Rowdy
Rowdypt desk
Published on

செய்தியாளர்: ஸ்ரீதர்

கடலூரில் கடந்த மாதம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில், ரவுடி கும்பலொன்று உள்ளே புகுந்து பட்டாகத்தியுடன் நடனமாடியது. அதை தட்டிக் கேட்டவர்கள் மீது பட்டாகத்தியை வைத்து மிரட்டி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி சென்னை சூர்யா என்ற ரவுடியை கைது செய்தனர் அப்போது அவர், தப்பியோடிய போது அவரது கையும், காலும் முறிந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Rowdy
Rowdypt desk

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி நீதிமன்ற காவலில் இருக்கும் அவரை அவரது நண்பர்களும் குடும்பத்தாரும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, உள்ளே சென்று பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த விழாவை சமூக வலைதளங்களிலும் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டனர்.

Rowdy
கிடைத்தது அவ்ளோ தான்! மகளின் ஒற்றை கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை! கண்களை கலங்கவைக்கும் சம்பவம்!

விசாரணையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்தான் இக்கொண்டாட்டத்துக்கு அனுமதி கொடுத்தது என தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் சாந்தகுமார், வேல்முருகன், கவியரசன் ஆகிய மூன்று பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரவுடி சூர்யா, கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com