ஆழ்வார்பேட்டை: மதுபான விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு! விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமா?

ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூன்றுபேர் உயிரிழந்தனர்.
ஆழ்வார்பேட்டை விபத்து
ஆழ்வார்பேட்டை விபத்துPT
Published on

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அருகே இருக்கக்கூடிய சேமியர் சாலையில் செக்மேட் என்ற மதுபான பார் மற்றும் கிளப்புடன் கூடிய பப் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மதுபான பாரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் மற்றும் மணிப்பூரை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிஅளவில் பயன்பாட்டில் இருந்த நேரத்தில் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது. முதல் தளத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்ததில், உள்ளே 5க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டதாக தகவல் வெளியானது. தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வண்டியில் வந்த வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆழ்வார்பேட்டை விபத்து
ஆழ்வார்பேட்டை விபத்து

பின்னர் ஜேசிபி வாகனங்கள் மூலம் இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூன்று பேரும் அந்த மதுபான விடுதியில் வேலை செய்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆழ்வார்பேட்டை விபத்து
"பும்ராவை ஏன் பந்துவீச வைக்கவில்லை? நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு!" - ஹர்திக்கை விளாசும் வீரர்கள்!

மணிப்பூரை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

உயிரிழந்த 3 பேரின் உடல்களும் அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (45) என்பதும், இரண்டு பேர் மணிப்புரைச் சேர்ந்த மேக்ஸ் (21), லாலி( 22) என்பதும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை விபத்து
ஆழ்வார்பேட்டை விபத்து

மேலும் “உயிரிழந்த 3 பேரை தவிர கட்டிடத்தினுள் வேறு யாரும் இல்லை. மெட்ரோ பணிகள் காரணமாக கூரை இடிந்ததா என்பது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது. நிபுணர்கள் தான் தெரிவிக்க வேண்டும்” என சென்னை கிழக்கு காவல் இணை ஆணையர் தர்ம ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டை விபத்து
தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு இரு கண்கள் - கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

மெட்ரோ பணிகளால் விபத்து ஏற்பட்டதா?

தனியார் மதுபான விடுதி மேற்கூரை விழுந்ததற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அதனை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது.

ஆழ்வார்பேட்டை விபத்து
ஆழ்வார்பேட்டை விபத்து

விபத்து குறித்து பேசியிருக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம், “ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை. விபத்து நடந்த பகுதியிலிருந்து 240 அடி தொலைவில் தான் பணிகள் நடந்துவருகிறது” என்று விளக்கமளித்துள்ளது.

ஆழ்வார்பேட்டை விபத்து
'Love Laughter War'.. சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

விபத்துக்கு காரணமான கிளப்புக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com