விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மூன்று மீனவர்கள் உயிரிழப்பு

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மூன்று மீனவர்கள் உயிரிழப்பு
விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மூன்று மீனவர்கள் உயிரிழப்பு
Published on

குமரி மாவட்டம் ராமன்துறை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 14- பேர் இந்த மாதம் 6-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஓசானி என்ற விசைபடகில் 6ம் தேதி மாலை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முள்ளூர்துறை, மணக்ககுடியை சேர்ந்த 4 பேரும் அந்தப் படகில் சென்றுள்ளனர். மேலும், மேற்குவங்கத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

கொச்சி அருகே முனம்பம் பகுதியில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது இந்தப் படகு மீது ஒரு கப்பல் மோதியதில் படகு கடலில் முழ்கியது. ஆகஸ்ட் 7ம் தேதி அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடலில் மூழ்கிய படகில் இருந்து 5- மீனவர்களை அந்த வழியாக சென்ற மற்றொரு படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மீதமுள்ள 9 மீனவர்களை காணவில்லை. மீட்கப்பட்ட மீனவர்களில் ராமன் துறை கிராமத்தை சேர்ந்த ஜேக்கப், யுவராஜ் மற்றும் முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய மூவரும் வரும் வழியிலேயே உயிர் இழந்துள்ளனர். 

இந்தப் படகில் கொண்டுவரப்பட்ட ராமன்துறையயை சேர்ந்த எட்வின் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரையும் கொச்சின் உள்ள அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழந்த மூவரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இறந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

உயிரிழந்தவர்கள்:

1. ஜேகப் த/பெ அல்லெசி
2. யுகநாதன் த/பெ ரெங்கநாதன்
3. சகாயராஜ் த/பெ சீமான்

மருத்துவமனையில் உள்ளவர்கள்:

1. எட்வின் த/பெ ஆரோகியநாதன் (ராமந்துறை)
2. நரேன் (மேற்குவங்காளம்)

காணாமல் போனவர்கள்

1. யேசுபாலன் த/பெ தாசன் (ராமந்துறை)
2. ராஜேஷ் குமார் த/பெ தாசன் (ராமந்துறை)
3. ஆரோக்கிய தினேஷ் த/பெ தாசன் (ராமந்துறை)
4. ஷாலு த/பெ ஜோசப் (ராமந்துறை)
5. சகாயராஜ் த/பெ சேசயா (முள்ளுத்துறை)
6. வர்ஷன் த/பெ விட்டல்ராஜ் (மனக்குடி)
7. மரிய ராஜன் த/பெ விட்டல்ராஜ்
8. கேரளாவைச் சேர்ந்தவர்
9. மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில் கடலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7-பேர் உட்பட 9 பேரின் நிலமை என்ன என்பது குறித்து அவர்களின் உறவினர்கள் தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து இறந்த மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள், “படகு மோதி மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மீனவர்களுக்கு உடனடியாக போதிய நிவாரணத்தை வழங்க வேண்டும். படகு மீது மோதிய கப்பலின் ஓட்டுனர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” கோரிக்கை எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com