கச்சத்தீவில் 2-ம் நாள் திருவிழா: தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு

கச்சத்தீவில் 2-ம் நாள் திருவிழா: தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு
கச்சத்தீவில் 2-ம் நாள் திருவிழா: தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு
Published on

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் பங்கேற்காமல் தமிழக மீனவர்கள் புறக்கணித்துள்ளனர்.

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவலாயத்தில் ஆண்டுதோறும் இந்திய-இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 6-ம் தேதி இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ பலியானர். இதையடுத்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கச்சத்தீவு விழாவை மீனவர்கள் புறக்கணித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜோசப்தாஸ் ஜெபரெத்தினம், நெடுந்தீவு பங்குதந்தை ஜெயரஞ்சன் தலைமையில் பங்குதந்தைகள் கொடியேற்றினர். இதில் இலங்கையிலுள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று நடைபெறவுள்ள விழாவில், இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையில் இனக் கலவரத்திற்குப்பின், 2010 ஆம் ஆண்டு முதல் அரசு அனுமதியோடு இந்தியாவிலிருந்து பக்தர்கள் கச்சத்தீவு விழாவிற்குச் சென்று வந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இந்திய பக்தர்கள் கச்சத்தீவு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com