தமிழகத்தில் 1,05,822 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு 2812 ஆக உள்ளது.
சென்னையில் நேற்று 590 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 546ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,904ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 56,002 லிருந்து 47,643 ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 11,154 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,48,419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ''கேரளாவில் தொற்று குறையவில்லை. 19,000 பேர் நாள் ஒன்றுக்கு என பரவுகிறது. தமிழகத்தின் தொற்று உறுதியாகும் சதவீதம் 2.9 ஆக குறைவு. 1.12 கோடி இரண்டாவது தவணை செலுத்தவில்லை. பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 1824 என நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.13 நள்ளிரவு முதல் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் கவன குறைவாக உள்ளனர்'' என்றார்.