தவெக செயற்குழு கூட்டம்.. 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. முக்கியமானவை என்னென்ன? என்ன சொன்னார் விஜய்?

விஜய் தலைமையில் நடைபெற்ற, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் தீர்மானம்

விஜய் தலைமையில் நடைபெற்ற, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்

இதில் முக்கியமாக, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் கனவு, மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர்; தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர்; தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமையில்லை - தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம்
திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர்; தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர்; தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமையில்லை - தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம்

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பது, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது, மதுக்கடைகளை மூடிவிட்டு அரசின் வருவாய்க்கு மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள், தவெக செயற்குழு கூட்டத்தில் கவனம் பெற்றுள்ளன. மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என, பொதுமக்கள் மீது வரிச்சுமையை மட்டுமே திமுக அரசு அதிகம் விதிப்பதாகக் கூறி, மாநில அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்
இந்தியாவின் கூடாரத்தைக் காலிசெய்த அஜாஸ்.. வரலாற்றுத் தோல்வி.. “நான் சிறப்பாக செயல்படவில்லை” - ரோகித்

கனவுபோல் இருந்தது

தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது: த.வெ.க.
தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது: த.வெ.க.

கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைந்து தொடங்கவும், காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்கவும் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இஸ்லாமியர் உரிமை குறித்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தகைசால் தமிழர் விருது வழங்கப்படுவதை வரவேற்று தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்

மேலும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துகளையும் கட்சியின் தலைவர் விஜய் கேட்டறிந்தார். மாநாடு முடிந்து வரும்போது கனவுபோல் இருந்தது என்றும், எனக்காக இத்தனைபேர் கூடியது நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் விஜய் தெரிவித்தார். அதற்காக உழைத்த உங்களுக்கெல்லாம் நன்றி என்றும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதுபோல், கீழிருக்கும் ஒவ்வொரு தொண்டர்களையும் சந்திக்க நான் வருவேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
கேரளா| ரயில்வே தடங்களை சுத்தம் செய்தபோது ரயில் மோதி உயிரிழந்த 4 தமிழர்கள்.. சோகத்தில் சேலம் கிராமம்!

சிக்கல்களைப் பேசியவர்களுக்கு பாராட்டு

விக்கிரவாண்டி மாநாட்டில் நிகழ்ந்த சிக்கல்களைக் குறித்து பேசியவர்களைப் பாராட்டியதோடு, வரும் காலத்தில் படிப்படியாக சரிசெய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். குறிப்பாக மாநாட்டு உரையில் இஸ்லாமியர்கள் குறித்து எதுவும் பேசவில்லை என வருத்தம் நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர்.

ஒருசில மாவட்ட நிர்வாகிகள் மாவட்டங்களில் பல்வேறு விஷயங்களுக்கு காவல்துறை தடை விதிப்பதாக விஜய்யிடம் முறையிட்டனர். பின்னர் மாவட்ட அணி பொறுப்பாளர்களை தனித்தனியாக அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு 5 நிமிடம் பேசினார்.

தவெக தலைவர் விஜய்
”10 நாளில் பதவி விலகணும்..” - யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்.. மும்பை போலீசார் தீவிர விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com