தமிழகத்தில் 25 மாவட்டங்களில் உள்ள மக்களில் பலர் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடங்கள் குறித்து நாடு முழுவதும் மத்திய சுகாதாரத்துறை களப்பணி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்கள் மட்டுமே பெரும்பாலும் கழிப்பறை வசதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் மக்கள் இன்னனும் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் உத்தரகாண்ட், சிக்கிம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.