சரவணா ஸ்டோர்ஸின் தங்க மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது. அதேபோல் லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான நிலம், வங்கிக் கணக்குகள் உட்பட ரு.173 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஏற்கெனவே மார்ட்டின் சம்பந்தமான வழக்கு மற்றும் சரவணா ஸ்டோர்ஸின் வழக்கு இரண்டிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையினருக்கு கிடைத்த வலுவான ஆதாரத்தின் அடிப்படையில்தான் தற்போது இந்த சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பலமுறை நீதிமன்றத்திலும், தனிப்பட்ட முறையிலும் விசாரணை நடத்தப்பட்டு முக்கிய ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தியன் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்த புகாரில் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.