புதிய வகை கொரோனா தொற்று ஆபத்தானதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

”கொரோனா பல்வேறு மாதிரியாக உருமாருகிறது. இது எந்த வகையான உருமாதிரிகள் என்பது கண்டறியப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும்” - செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.
புதிய வகை வைரஸ் தொற்று
புதிய வகை வைரஸ் தொற்றுமுகநூல்
Published on

இன்று சென்னை செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், “புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் நேற்று 230 என்று உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 1,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையும் மிதமான பாதிப்பு உள்ளதாகதான் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வகை தொற்று 3, 4 நாட்கள் சரி ஆகிவிடும் என்பதால் பதற்றம் தேவை இல்லை.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் பரிசோதனை அதிகரிக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்று 264 மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் மூலம் 8 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் சென்னையில் 2 பேருக்கு சாதாரண இருமல் மற்றும் சளிதான் என்று தெரியவந்துள்ளது.

புதிய வகை வைரஸ் தொற்று
“தீடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை” - ICMR விளக்கம்

மேலும் கொரோனா பல்வேறு மாதிரியாக உருமாருகிறது. இது எந்த வகையான உருமாதிரிகள் என்பதை கண்டறியப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com