கொரோனாவால் திருப்பூரில் முதல் உயிரிழப்பு: 22 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்!

கொரோனாவால் திருப்பூரில் முதல் உயிரிழப்பு: 22 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்!
கொரோனாவால் திருப்பூரில் முதல் உயிரிழப்பு: 22 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்!
Published on

திருப்பூரை சேர்ந்த 22 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இது திருப்பூர் மாவட்டத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டம் மங்களம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவருக்கு கொரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்தார். இது கோவை, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பாக அமைந்துள்ளது. இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.

22 வயதே ஆன ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணிக்காக தொடர்ந்து உழைத்து உயிர்நீத்த இளைஞருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com