2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக சார்பாக சென்னை ராயபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டார். மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை., அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு., மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர்... திமுகவில் இருக்கக்கூடிய 13 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவர்களை பொறுப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் தயாரா என்று கேள்வி எழுப்பினர்.? அதேபோல திமுகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெறும் என்று கூறினார்.
தற்போது தீபாவளி வருவதால் நரகாசுரனை அழித்தது போல் திமுக நரகாசுரனின் ஆட்சி அழியும் என்று விமர்சனம் செய்தார்.