பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே “உலக முதலீட்டாளர் மாநாடு 2024” சென்னையில் இன்று தொடங்கியது. பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் வகையில் பங்கேற்றுள்ளன. இன்றும் நாளையும் இம்மாநாடு நடக்கவிருக்கிறது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உடன் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனத் தலைவர்களும், 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி ஹீண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கவும் அதனை விரிவுபடுத்தவும் முதலீடுகளை வழங்கின. இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடானது, இரு தினங்களின் முடிவில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரை ஈர்க்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்புடன் முதல் நாளான இன்று தொடங்கப்பட்டது. ஆனால் போட்டிப்போட்ட உலக நிறுவனங்களால் மாநாட்டின் முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன்மூலம் இரண்டு நாட்களில் எட்டப்படும் என்று நிர்ணயிக்கப்பட்ட 5.5 லட்சம் கோடி இலக்கானது, முதல் நாளிலேயே எட்டப்பட்டு சாதனை படைத்துள்ளது.
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் கவனம் ஈர்க்கும் வகையிலான முதலீட்டை அறிவித்தன. அந்தவகையில் இம்மாநாட்டில் அதிகம் கவனம் ஈர்த்தது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16000 கோடி முதலீட்டில் நிறுவனப்படவிருக்கும் மின்சார வாகனங்கள் உற்பத்தி மையம். இது தூத்துக்குடியில் நிறுவப்படவிருக்கிறது.
மேலும்,
*குவால்காம் - சென்னை வடிவமைப்பு மையம் விரிவாக்கம் - ரூ.177.27 கோடி முதலீடு
*கோத்ரேஜ் நிறுவனம் - உற்பத்தி மையம் - ரூ.515 கோடி முதலீடு
*பெகாட்ரான் - நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் - ரூ 1,000 கோடி முதலீடு
*டிவிஎஸ் நிறுவனம் - தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் - ரூ.5,000 கோடி முதலீடு
*ஹூண்டாய் மோட்டார்ஸ் - மின்சார கார், மின்கலன்கல் உற்பத்தி நிறுவனம் - ரூ.6,180 கோடி முதலீடு - காஞ்சிபுரம்
*JSW Energy- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் - ரூ 12,000 கோடி முதலீடு
*டாடா எலக்ட்ரானிக்ஸ் - செல்போன் உற்பத்தி மையம் - ரூ 12,082 கோடி முதலீடு - கிருஷ்ணகிரி
*வின்ஃபாஸ்ட் - மின்சார வாகனங்கள் உற்பத்தி மையம் - ரூ.16,000 கோடி முதலீடு - தூத்துக்குடி
செய்யப்படவுள்ளன