தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைக்காகச் செல்லும் வழியில் மதுரையில் முதலமைச்சர் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புரை செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக வரும் சட்டமன்ற தேர்தல் அமையும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்தார்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/RQz4J4yxQf4" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் மீது பொய்க்கு மேல் பொய்களை அவிழ்த்து விடுகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்திற்கு கிடைத்துள்ள முதலீடு, கொரோனா காலத்தில் வாங்கிய மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றிற்கு வெள்ளை அறிக்கை கேட்டால், அதிமுக பதிலளிக்க முடியாமல் திமுக மீது பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுவதா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ExeMQbGwA3A" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>