ரூ.20 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் திருட்டு : நீண்ட நாள் திருடர்கள் கைது

ரூ.20 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் திருட்டு : நீண்ட நாள் திருடர்கள் கைது
ரூ.20 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் திருட்டு : நீண்ட நாள் திருடர்கள் கைது
Published on

திருவாரூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 154 செல்போன்களை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருட்டு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2019ஆம் ஆண்டில் 239 புகார்கள் பெறப்பட்டன. இதுதொடர்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து மாவட்ட எஸ்பி துரை உத்தரவின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், பாமனியை சேர்ந்த நெப்போலியன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஸ்ரீதர் ஆகிய 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 154 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து, செல்போன்களின் உரிமையாளர்களுக்கு காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்களை இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிமையாளர்களிடம் எஸ்பி துரை ஒப்படைத்தார். மேலும், இந்த செல்போன் திருட்டில் மேலும் 8 பேரை தேடி வருவதாக எஸ்பி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com