டீசல் விலை உயர்வால் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள்

டீசல் விலை உயர்வால் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள்
டீசல் விலை உயர்வால் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள்
Published on

டீசல் விலை உயர்வு காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயக்கம் காட்டிவருகின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். டீசல் விலை உயர்வால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அவலமும் அங்கு ஏற்பட்டுள்ளது. 15 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது ராமேஸ்வரத்தில் ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாயை தொட்ட நிலையில் மீனவர்கள் அதை வாங்கி கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் ஒவ்வொரு முறை கடலுக்கு சென்று வரும்போதெல்லாம் நஷ்டத்தை சந்திப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வினால் கடந்த 9.10 .21 அன்று முதல் தற்போது வரை மீனவர்கள் டீசல் விலை உயர்வினால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு கடல் நிறுத்தி வைத்து வருகின்றனர். தமிழக அரசு மானியம் முறையில் விசைப்படகுகளுக்கு 1800 லிட்டர் டீசல் கொடுத்தாலும், அந்த மானிய டீசலும் 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மானிய முறையில் கொடுக்கப்படும் டீசல் ஒரு கடல், இரண்டு கடலுக்கு செல்வதற்கு சரியாகி விடுவதாகவும் அதனை வாங்கி கடலுக்கு சென்றாலும் தங்களுக்கு எந்த லாபம் கிடைப்பதில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த ராமேஸ்வரம் மீன்பிடி தொழிலை நம்பி மறைமுகமாகவும், நேரடியாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தொடர் வேலை நிறுத்த காரணத்தால் 20 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தங்களின் மீன்பிடித்தொழிலை மெல்ல மெல்ல நசுங்கி மூடுவிழா காண்பதற்கான ஏற்பாடுகள்தான் இவையாவும் எனக்கூறி மத்திய, மாநில அரசுக்கு எதிராக டீசல் விலை உயர்வை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கி கடலுக்குச் என்றாலும் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்பிடித்தாலும், இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் கைது செய்வது ரோந்து கப்பலை வைத்து தமிழக மீனவர்களின் படகு மீது மோதி மூழ்கடித்து உயிர் இழப்பை ஏற்படுத்தி வருவதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் ராமேஸ்வரம் மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குரிய வரும் நிலையில் உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com