காதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு

காதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு
காதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி, 2 இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள ஏ.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவர் ஒரு பெண்ணைக் காதலித்ததாக தெரிகிறது. ஆனால் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்திற்கு மகேஷ், தியாகு ஆகியோர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பெண்ணின் உறவினர்கள் அவர்கள் இருவர் மீதும் கோபத்துடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மகேஷும், தியாகுவும் காமன்தொட்டி கிராமத்தில் கடையில் தங்கள் செல்போனுக்கு ரீசாஜ்ச் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தீப் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும், மகேஷ் மற்றும் தியாகுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயங்கள் அடைந்த இருவரும், ஒசூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com